குளுவாங் பொது இடங்களில் உள்ள எல் இ டி திரைகளில் ஆபாசக் காட்சி! அதிர்ந்த பொதுமக்கள்!

top-news

கோலாலம்பூர், அக் 30: ஜொகூர், குளுவாங் நகரில் உள்ள பல எல்.இ.டி. மின்னணுத் திரைகள் ஊடுருவலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவற்றில் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குளுவாங் நகராட்சி மன்றம் (MPK) காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளதாகவும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் நகராட்சி மன்றம் கூறியுள்ளது.

மேலும், மின்னணுத் திரைகளைப் பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்துடன் இணைந்து, இந்த ஊடுருவலுக்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், நகராட்சி மன்றத்தின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மாநில உள்ளாட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜாஃப்னி ஷுகோர் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி மன்றத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அனைத்து எல்.இ.டி. திரைகளும் தற்காலிகமாகச் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

டத்தாரான் தாசிக் குளுவாங், தாமான் இந்தான் மற்றும் கஹாங் செல்லும் சாலையின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகளே இந்த ஊடுருவலுக்கு இலக்காகியுள்ளன!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்