BUDI MADANI மானிய விலை எரிவாயு மே மாதம் வரையும் தொடரும்! -அன்வார் உறுதி!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 29,

மடானி அரசின் BUDI MADANI RON 95 மானிய விலை PETROL திட்டம் மே மாதம் வரையும் தொடரும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார். ஈரான் அமேரிக்கா போரால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் எரிவாயு தட்டுப்பாடு மலேசியாவுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது மலேசியாவின் கையிருப்பில் இருக்கும் எரிவாயுவைக் கொண்டு BUDI MADANI திட்டத்தை மே மாதம் வரையும் செயல்படுத்த முடியும் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். 

ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மாற்று எரிசக்தியை இறக்குமதி செய்வதற்கான அனைத்து வகையிலான வாய்ப்புகளையும் அரசு ஆராய்ந்து வருவதாக Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். மலேசியாவின் எரிவாயு நிறுவனமான Petronas மலேசியாவில் மட்டுமே செயல்படவில்லை. கடந்த ஆண்டு Brazil, Canada போன்ற நாடுகளில் Petronas நிறுவனம் முதலீடுகளைச் செய்துள்ளதால் அந்த நாட்டிலிருந்து எரிவாயுகளைப் பெறவும் வாய்ப்புகள் தற்போது உள்ளது என்றும் உலக வர்த்தகத்தில் எரிவாயுவின் விலை உயர்ந்தாலும் மக்களின் அன்றாட வாழ்வியலுக்கான எரிவாயு மானியத்தை அரசாங்கம் நிறுத்தாது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *