புந்தோங்கில் 2 கோயில்களுக்கு அரசாங்க நிலங்கள்! YB Thulsi Manogaran பெருமிதம்!

top-news

நவம்பர் 1,

நேற்று புந்தோங்கில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவனேசன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். புந்தோங் பகுதியில் அமைந்துள்ள 2 கோயில்களுக்கு அரசு நிலம் வழங்கப்பட்டதாகப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் YB Thulsi Manogaran தெரிவித்தார். சுமார் 1000 மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் புந்தோங் JALAN SUNGAI PARI-யில் அமைந்துள்ள 110 ஆண்டுகள் பழமையான Devi Sri Maha Kaliamman ஆலயத்திற்கும் SUNGAI PARI TOWERS-இல் அமைந்துள்ள Arulmigu Maha Muniswarar ஆலயத்திற்நிகும் அரசு நிலம் வழங்கப்பட்டதாக Thulsi Manogaran தெரிவித்தார்.

கோயில்களின் நிலம் பேராக் மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருப்பதாகவும் சுமார் 1.2 ஏக்கர் நிலத்தில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாகப் பதிவுச் செய்யப்பட்ட கோயில்களுக்கு அரசாங்கத்தின் மூலமாக நிலங்களைப் பெற பல்வேறு வழிகள் உள்ளது. கோயில் நிர்வாகத்தின் முறையான ஆவணங்களுடன் மாநில நிலத் துறையிடம் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்