மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி போட்டியிடுவாரா?
- Surendran Sumdraraj
- 10 Sep, 2026
கொல்கத்தா, செப். 10 –
மேற்கு வங்கத்தில் ரெஜினகர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜினகர் தொகுதியில் வென்ற ஹுமாயூன் கபீர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் அந்தத் தொகுதி காலியானது. அதேபோல், நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் சுவேந்து அதிகாரியும் பதவி விலகியதால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த பொதுத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரியிடம் 9,665 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.
தற்போது பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி மற்றும் திரிணாமுல் காங்கிரசில் நிலவும் உட்கட்சி பிரச்சினைகள் காரணமாக, மம்தா நேரடியாக தேர்தலில் களமிறங்க வேண்டும் என அக்கட்சியின் சில நிர்வாகிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மம்தா எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளை வலுவாக எழுப்ப முடியும் என்றும் கட்சியினர் கருதுகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



