அம்னோ – PKR – அமானா கட்சியினருக்கு பாஸ் அழைப்பு!

- Shan Siva
- 31 Dec, 2024
கோலாலம்பூர், டிச 31: மலேசிய முஸ்லிம்களின் நல்லிணக்கத்தை அச்சுறுத்துபவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை நடத்தவிருக்கும் பேரணியில் கலந்துகொள்ள அம்னோ, பிகேஆர் மற்றும் அமானா கட்சியினருக்கு பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கோலாலம்பூர், கம்போங் பாருவில் உள்ள மஸ்ஜித் ஜமேக் மசூதிக்கு வெளியே Himpunan Bangkit Ummah போராட்டம் நடத்தப்படும் என்று பாஸ் கட்சியின்
இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் ஹஃபீஸ் சப்ரி தெரிவித்தார்.
பேரணி அரசியல்
எல்லைகளுக்கு அப்பால் சென்று முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக்
கொண்டது என்றும், மூத்த டிஏபி
தலைவர்களான ஹன்னா யோ மற்றும் ங்கா கோர் மிங் ஆகியோருக்கு எதிராகவும் தாங்கள்
போராட்டம் நடத்தப் போவதாக ஹஃபீஸ் கூறினார்.
அனைத்து
நிறுவனங்களையும் வரவேற்கிறோம். இது அரசியல் விவகாரம் அல்ல, முஸ்லிம்களின் பிரச்சினை. மேலும் ஒவ்வொருவருக்கும்
எதிர்ப்பு தெரிவிக்கவும் தங்கள் கருத்துக்களை வெளியிடவும் உரிமை உள்ளது என்று அவர் பாஸ்
தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *