நெகிரி செம்பிலான் அரசர் நியமன விவகாரம்: பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் – அகமட் சாஹிட்
- Surendran Sumdraraj
- 06 Jun, 2026
புத்ராஜெயா, ஜூன் 6 –
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டி-பெர்துவான் பெசார் (மாநில அரசர்) நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.
தேசிய TVET தினம் 2026 நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் நீதிமன்றம் போன்ற சட்ட அமைப்புகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
“எனது கருத்துப்படி, இந்த பிரச்சினைக்குச் சிறந்த தீர்வு பேச்சுவார்த்தை மூலமாகவே கிடைக்கும். இதனை நீதிமன்றம் அல்லது சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்க்க வேண்டிய தேவையில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பாரம்பரிய அரசியல் மற்றும் அரச மரபு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் டேவான் கெஅடிலான் உண்டாங் (DKU) அமைப்பின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



