சரவாக் பெத்தோங்கில் விபத்து! – இருவர் பலி; 9 பேர் காயம்
- Shan Siva
- 02 Jan, 2026
கிள்ளான், ஜன 2: சரவாக் மாநிலம் பெத்தோங் மாவட்டத்தில் உள்ள ஜாலான் லுபோக் அந்து சாலையில் நேற்று நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்தனர்.
Toyota Hilux வகனமும் ஒரு காரும் மோதி ஏற்பட்ட இந்த
விபத்தில், Toyota Hilux பிக்கப்பில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததைத்
தொடர்ந்து, பெத்தோங் தீயணைப்பு
மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 8 பேர் கொண்ட குழு சம்பவ
இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத்துறை செய்தி தொடர்பாளர்தெரிவித்தார்.
தீயணைப்பாளர்கள் சம்பவ
இடத்திற்கு வந்த போது, காயமடைந்தவர்களுக்கு பொதுமக்கள்
ஏற்கனவே உதவி செய்திருந்தனர்.
காரின் பின்புற
இருக்கையில் சிக்கியிருந்த பெண் ஒருவரை மீட்பதற்கான நடவடிக்கையை தீயணைப்பாளர்கள்
மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த சுகாதார அமைச்சக
ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்ததை உறுதி
செய்தனர் என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்தில், பிக்கப் வாகனத்தில் 7 பேர், காரில் 4 பேர் பயணித்திருந்ததாகவும்
தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



