ஜலான் பத்து பஹாட் - மெர்சிங் சாலையில் விபத்து - முதியவர் பலி!

- Shan Siva
- 18 Dec, 2024
குளுவாங், டிச 18: குளுவாங் ஜலான் பத்து பஹாட்-மெர்சிங்கில் KM56.5 ல் ஏற்பட்ட விபத்தில், முதியவர் ஒருவர் பலியானார்.
இன்று காலை 9 மணியளவில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து
குறித்து பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் Nik Mohd Azmi Husin தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 78 வயதான Patrick Lau Yuen Heng என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முதியவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு
சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொரு காரில் வந்த 34 வயது நபர் உடலில் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும், அவர் இங்குள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருவதாகவும் நிக் முகமட் ஆஸ்மி மேலும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *