சித்தியாவங்சா - பந்தாய் சாலையில் விபத்து! - இருவர் பலி
- Shan Siva
- 20 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 20 : சித்தியாவங்சா -பந்தாய் விரைவுச்சாலையில் (SPE) கான்கிரீட் தடுப்பு மீது டிரெய்லர் மோதியதில் இரு ஆண்கள் பலியாகினர்.
ஓட்டுநர் மற்றும் இணை ஓட்டுநரான இருவரும் உள்ளூர் ஆடவர்கள் என்றும், சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சக துணை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் சான் சோவ் லின் அருகே உள்ள செராமிக் ப்ரோ தொழிற்சாலை அருகே இரவு 8.55 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது.
அவசர அழைப்பைத் தொடர்ந்து கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையம், புடு நிலையத்திலிருந்து ஒன்பது பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
டிரெய்லர் ஒரு கான்கிரீட் பிரிப்பானில் மோதியதாகவும், இதன் விளைவாக இருவரும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையில் இருந்து கீழே தரையில் வீசப்பட்டதாகவும் செயல்பாட்டுத் தளபதி நூர் சஹேலா முகமது ஜைனல் தெரிவித்தார்.
இதனை அடுத்து உடல்களை மீட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



