காமராஜர், எம்.ஜி.ஆர். புகைப்படங்களுடன் முதல்வர் விஜய் படம் வைரல்

top-news
FREE WEBSITE AD

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மற்றும் அவர்களுக்கு உணவு பரிமாறிய புகைப்படங்களை, முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் பழைய புகைப்படங்களுடன் இணைத்து அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றப்பட்டது. மேலும், இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *