8 வயது சிறுமி THAVANITHA கொலை! பெற்றோர் உட்பட குடும்பத்தினர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 29 Mar, 2026
மார்ச் 29,
சிறுமி ஒருவரின் புகைப்படம் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து தைப்பிங் காவல்துறை சிறுமியின் பெற்றோர் என நம்பப்படும் இருவரையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்துள்ளதாகத் தைப்பிங் மாவட்டக் காவல் ஆணையர் ABDUL MALEK ISMAIL தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுமி 8 வயதே ஆன THAVANITHA என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய உடல் பிரேதப்பரிசோதனையின் போது காணொலியாக எடுக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் 26, நண்பகல் 12.43 மணிக்குத் தைப்பிங் மருத்துவமனைக்கு THAVANITHA எனும் 8 வயது சிறுமி சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட நிலையில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகச் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும் அச்சிறுமி உயிரிழந்ததாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தாலும் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டதால் அச்சிறுமி உயிரிழந்ததாகப் பிரேதப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. சிறுமியின் கை எலும்பு முறிந்திருப்பதாகவு முதுகு நெஞ்சுப் பகுதிகளில் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அச்சிறுமியின் புகைப்படத்துடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் என நம்பப்படும் இருவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



