இந்திய எல்லையில் படைகளைக் குறைத்த சீனா – மத்திய அரசு தகவல்
- Surendran Sumdraraj
- 15 Sep, 2026
புதுடெல்லி, செப். 15 –
இந்தியா–சீனா எல்லைப் பகுதியில் நிலவி வந்த பதற்றம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன இராணுவ வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அதிகளவு படைகளைக் குவித்ததால் நீண்டகால பதற்றம் நிலவியது.
இந்த நிலையை சீர்செய்ய இருநாட்டு இராணுவ அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். மேலும், எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு பிரதிநிதிகள் மட்டத்திலும் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னரும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.
இதன் விளைவாக, இந்தியாவின் வடக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்து சீனா கடந்த ஆண்டே கணிசமான அளவு படைகளைக் குறைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



