மாணவி உயிரைப் பலிகொண்ட பள்ளி விபத்து! ஆசிரியருக்கு 2 நாள்கள் நீதிமன்றக் காவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 13: கிளந்தானில் நேற்று முதலாம் படிவ மாணவி பலியானதற்கும், மற்றொரு மாணவி காயமடைந்ததற்கும் காரணமான ஆசிரியர் இரண்டு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அலட்சியமாக வாகனம் ஓட்டியது தொடர்பான விசாரணைகளுக்கு  உதவும்பொருட்டு , 57 வயதான அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தா பாருவில் உள்ள பள்ளி வளாகத்தில் சம்பந்தப்பட்ட இரு மாணவிகளும் திடீரென பாய்ந்து வந்த காரினால் பாதிக்கப்பட்டனர்.

ஒரு மாணவி தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவி ராஜா பெரெம்புவான் ஜைனப் II மருத்துவமனையில் பலத்த காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

ஓட்டுநர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்ததால், மசூதிக்கு வெளியே இருந்த மாணவிகள் மீது கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கோத்தா பாரு காவல் துறைத் தலைவர் அஸ்மிர் டமிரி நேற்று தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *