பிரெஞ்சு ஓபனில் வரலாறு படைத்தார் மாஜா சுவாலின்ஸ்கா

top-news
FREE WEBSITE AD

பாரிஸ், ஜூன் 5 –

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை Maja Chwalinska புதிய வரலாறு படைத்துள்ளார். தகுதிச்சுற்றில் இருந்து போட்டிக்குள் நுழைந்த அவர், ரோலான் கரோஸ் வரலாற்றில் தொழில்முறை காலகட்டத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையாகச் சாதனை புரிந்துள்ளார்.

24 வயதான சுவாலின்ஸ்கா, மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ரஷியாவின் Diana Shnaider-ஐ 7-6 (7/4), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

உலக தரவரிசையில் 114-ஆவது இடத்தில் உள்ள அவர், இறுதிப்போட்டியில் ரஷிய இளம் நட்சத்திரம் Mirra Andreeva-வை எதிர்கொள்கிறார். ஆண்ட்ரீவா, மற்றொரு அரையிறுதியில் Marta Kostyuk-வை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் ஆண்ட்ரீவாவை வெற்றி கொண்டால், கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் தகுதிச்சுற்றில் இருந்து வந்து சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை சுவாலின்ஸ்கா பெறுவார். இதற்கு முன்பு 2021 அமெரிக்க ஓபனில் Emma Raducanu இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட சுவாலின்ஸ்கா, “என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *