ஆண் மாணவனுக்குப் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 26,

13 வயது மாணவனைத் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 31 வயது Muhammad Izzuddin எனும் ஒப்பந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு Sesyen நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தன் மீதானக் குற்றத்தை மறுத்த 31 வயது ஆசிரியர் மேல் விசாரணையுடன் ஜாமின் கோரிக்கையையும் கோரியதை Sesyen நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு RM 12,000 ரிங்கிட் ஜாமின் வழங்கியது. 

கடந்த ஜூன் 4, கோலா திரங்கானுவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் 13 வயது பள்ளி மாணவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவப் பரிசோதனை ஆவணங்களையும் சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் ஜூலை 23 மேற்கொள்ளப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட 31 வயது Muhammad Izzuddin எனும் ஒப்பந்த ஆசிரியர் மாவட்டத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *