Manchester City ஜூனியர் FA கோப்பை சாம்பியன்
- Surendran Sumdraraj
- 15 May, 2026
Manchester City அணி, ஏழு சீசன்களில் மூன்றாவது முறையாக FA Youth Cup பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் Manchester United அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
போட்டியின் இறுதிநேரத்தில், முன்னாள் இங்கிலாந்து நட்சத்திர வீரர் Emile Heskeyயின் மகனான Reigan Heskey 87ஆவது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து அணிக்குக் கோப்பையை உறுதிசெய்தார். அவரது கோல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த ஆட்டத்தை காண Pep Guardiola, Bruno Fernandes, Michael Carrick மற்றும் Antoine Semenyo உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் மற்றும் இரு கிளப்புகளின் நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர்.
இந்த வெற்றியால் Manchester City இளம் அணியின் வளர்ச்சி மற்றும் அகாடமி அமைப்பின் வலிமையை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



