‘வந்தே மாதரம்’ முழு பாடல் விவகாரம் – தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் இடையே மோதல்
- Surendran Sumdraraj
- 09 Sep, 2026
ஸ்ரீநகர், செப். 9 –
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது.
ஸ்ரீநகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ முழு பாடலும் இசைக்கப்பட்டது. அப்போது தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், அந்த நிகழ்வின் காணொலியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, காங்கிரஸ் பின்பற்றும் நடைமுறையைக் கூட்டணி கட்சிகளும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது, ‘வந்தே மாதரம்’ பாடலை எப்போது, எவ்வளவு பாட வேண்டும் என்பதை கூட்டணி கட்சிகள் தங்களுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



