பத்துமலையில் தூய்மை தைப்பூசம்! நம் சமயம் அனைவருக்குமானது! – Yuneswaran புகழாரம்!
- Thinagaren Sanggaren
- 25 Jan, 2026
ஜனவரி 25,
நம் சமயம் அனைவருக்கும் சுமூகமான உறவை வலுப்படுத்தும் என ஒற்றுமை துறை துணை அமைச்சர் Yuneswaran தெரிவித்தார். சமயங்களுக்கிடையிலான நல்லுறைவை வளப்படுத்தவும் தைப்பூசத்தில் சுகாதாரத்தைப் பேணவும் தூய்மை தைப்பூசதம் எனும் திட்டத்தைக் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வரும் தொண்டூழியர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும் என Yuneswaran கேட்டுக்கொண்டார். பத்துமலை தைப்பூசத்தில் 6000 தொண்டூழியர்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படவிருக்கும் CLEAN THAIPUUSAM எனும் நடவடிக்கை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் துணை அமைச்சர் Yuneswaran தெரிவித்தார்.
பொது இடங்களில் குப்பைப் போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலில் இருக்கும் இம்மாதிரியான சூழலில் தூய்மைக்கு முன்னுரிமை அளித்து குப்பைகளை முறையாக அகற்றுவதும் நம் பொறுப்பு என்பதை இந்த தூய்மை தைப்பூசத் திட்டம் நினைவூட்டியுள்ளது. இத்திட்டத்தைக் கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் CLEAN THAIPUUSAM நடவடிக்கைக் குழுவிற்கு நாட்டின் முதன்மை குடிநீர் நிறுவனமான Spritzer ஆதரவை அளித்துள்ளது போல நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என ஒற்றுமை துறை துணை அமைச்சர் Yuneswaran கேட்டுக்கொண்டார். நம் சமயத்தை நாம் பொறுப்புடன் கொண்டாடுவோம் என ஒற்றுமை துறை துணை அமைச்சர் Yuneswaran பக்தர்களுக்கு நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



