இத்தாலி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்; சில்வியோ பால்டினி பொறுப்பேற்பு
- Surendran Sumdraraj
- 14 Apr, 2026
இத்தாலி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக Silvio Baldini நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் சமீபத்திய தோல்விகள் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்குப் பிறகு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இத்தாலி அணியின் பயிற்சியாளராக இருந்த Gennaro Gattuso பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் இத்தாலி கால்பந்து சம்மேளனம் ஈடுபட்டிருந்தது. இதன் பின்னர், அனுபவமிக்க பயிற்சியாளரான சில்வியோ பால்டினி இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
67 வயதான பால்டினி, இத்தாலி அண்டர்-21 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர். மேலும் எம்போலி, பார்மா, லெச்சே, கட்டானியா உள்ளிட்ட பல கிளப் அணிகளை பயிற்றுவித்த அனுபவம் பெற்றுள்ளார்.
வரவிருக்கும் ஜூன் மாத நட்பு ஆட்டங்களில் லக்சம்பர்க் மற்றும் கிரீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் இத்தாலி அணியை வழிநடத்த உள்ளார். இந்த காலப்பகுதியில் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



