காங்கோ பள்ளியில் பயங்கர தீ – 26 மாணவ-மாணவியர் பலி

FREE WEBSITE AD

கின்ஷாசா, செப். 15 –

காங்கோ நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 மாணவ-மாணவியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் சில பகுதிகள் நீண்டகாலமாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தின் புகாவு நகரில் உள்ள சிம்பண்டா பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் இந்த விபத்து ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் மாணவ-மாணவியர் வகுப்புகளில் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பள்ளி வளாகத்தில் திடீரென தீப்பற்றியது. தீ வேகமாக பரவியதால் பள்ளிக்குள் இருந்த பல மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தியதுடன், பள்ளிக்குள் சிக்கியிருந்த மாணவர்களையும் மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் மொத்தம் 26 மாணவ-மாணவியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *