உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பொருளாதார மாநாடு-அமெரிக்காவில் நடைபெறுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 20-

உலகத் தமிழர் 12ஆவது பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் மாதம் 3, 4ஆம் தேதிகளில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் நடைபெறவுள்ளது என்று மாநாட்டு ஏற்பாட்டுக்குழு தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தமிழர்கள் பொருளாதாரம் வணிகத்துறை, தொழில்துறை ஆகியவை உயர்கல்வியால் மேம்பாடு அடைய ஆண்டுதோறும் இம்மாநாடு ஒன்று கூடுகிறது.
இம்மாநாட்டின் 11ஆவது பொருளாதார மாநாடு கோலாலம்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் தலைமையில் நடைபெற்றது.




இந்த ஆண்டு நடக்கும் அமெரிக்க மாநாட்டில் மேரிலேண்ட் ஆளுநர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தொழிலதிபர்களும் இணைந்து சுமார் 300 பேராளர்கள் கலந்து கொள்வார்கள்.உலக வங்கி தலைவர், கூகுள் நிறுவன முதன்மை செயலவை அதிகாரி சுந்தர் பிச்சை, பெப்சி நிறுவன முதன்மை அதிகாரி திருமதி இந்திரா நூயி என அமெரிக்காவிலிருந்து 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.'

கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல், இரவு விருந்து, சுற்றுலா என பலவற்றையும் உள்ளடக்கிய மாநாடாக இது அமைந்திருக்கும்.அமெரிக்கா உலகின் மிக உயர்ந்த நாடு. பல துறையில் பொருளாதார நிபுணர்கள் தொழில் புரிபவர்கள் தலைசிறந்த விற்பன்னர்கள் என பலரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை இம்மாநாடு ஏற்படுத்தித்தரும்.

இந்தியாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.மற்ற நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என நம்பப்படுகிறது.
மலேசியாவிலிருந்து 50க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதிமுன்னிலை தொழில் வல்லுநர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இம்மாநாட்டினை உலகத் தமிழர் பொருளாதார நிறுவனர் - சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் சம்பத், அமெரிக்க மேரிலேண்ட் முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜன் நடராஜன், முன்னாள் பிரபல திரைப்பட நடிகரும் இந்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான நெப்போலியனும் மாநாட்டினை முன்னின்று நடத்துகின்றனர். www.economic conference. com எனும் இணையதள முகவரியில் பார்க்கலாம்.

சென்ற மாநாட்டை கோலாலம்பூரில் நடத்த உதவிய மலேசியத் தமிழர்களை மதித்து அவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாநாட்டுத் தலைவரும் மெட்ராஸ் டெவலப்மெண்ட் சங்கத்தின் தலைவருமான டாக்டர் சம்பத் கேட்டுக் கொள்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *