ஜொகூரில் 4 இடங்களில் ம.இ.கா போட்டி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 3: ஜொகூர் மாநிலத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட ம.இகா. திட்டமிட்டுள்ளதாக ஜொகூர் ம இ கா. தலைவர் கே. ராவன் குமார் தெரிவித்துள்ளதாக FMT செய்தி வெளியிட்டுள்ளது. போட்டியிட விரும்பும் தொகுதிகளை உரிய நேரத்தில் கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார். தற்போது ஜோகூரில் ம  இ கா மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது.

அடுத்த 60 நாட்களுக்குள் 16-வது மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், ஜொகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து அம்மாநில அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 2022-ல் நடந்த கடந்த மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட 56 இடங்களில் 40 இடங்களை பாரிசான் நேஷனல் வென்று மாநில அரசை அமைத்தது.

பக்காத்தான்  ஹராப்பான் 12 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் மூன்று இடங்களையும், மூடா ஒரு இடத்தையும் கைப்பற்றின.

இந்த ஆண்டு தேர்தலில் அனைத்து 56 இடங்களிலும் போட்டியிடப் போவதாக பாரிசான் கூறியுள்ளது. மேலும், இந்தக் கூட்டணி 40-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல இலக்கு வைத்துள்ளதாக அதன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *