ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும்! அனைத்து அமைப்புகளுக்கும் அன்வார் உத்தரவு
- Shan Siva
- 06 Jan, 2026
புத்ராஜெயா, ஜன 6:ஊழல் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராக சட்ட வரம்புக்குள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்க அமைப்புகளுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமர் துறை மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அவர், காவல்துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB), எல்லை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள், இராணுவம், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் விதிவிலக்கு இன்றி பொறுப்புக்கூற வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.
அமைப்புகளைச் சீர்திருத்துவதற்கான அதிகாரமும் ஆதரவும் தற்போது இருப்பதால், பதவியில் இருக்கும் போதே ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஓய்வுக்குப் பிறகு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



