ஸம்ரி விநோத் உட்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒற்றுமைத்துறை அமைச்சர் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7-

சமூக ஊடகத்தில் இனம், சமயம், அரச குடும்பம் (3ஆர்) தொடர்பான எதிர்மறையான தகவல்களை வெளியிட்டுள்ள மத போதகர் ஸம்ரி விநோத் உட்பட பலர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் நேற்று வலியுறுத்தினார்.

அந்நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்படி போலீஸ்துறைக்கும் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கும் (எம்சிஎம்சி) அவர் கோரிக்கை விடுத்தார். பல வலைதளவாசிகள் மீது குறிப்பாக, விஜயன் சவரிநாதன், ஸம்ரி விநோத், சரவணன் சண்முகம் மற்றும் கிரைம்-மேன் (டிக் டாக் பெயர்) ஆகியோர் மீதும் இதர சமயங்களைச் அவமதிக்கும் வகையில் இனம், சமயம், அரச குடும்பம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ள இதர நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று ஏரன் சொன்னார்.

இதுபோன்ற பொறுப்பற்ற தகவல்களைப் பரப்புவோர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

Menteri Perpaduan, Datuk Aaron Ago Dagang, menggesa tindakan tegas terhadap individu yang menyebarkan kenyataan negatif berkaitan kaum, agama, dan institusi diraja (3R) di media sosial. Beliau meminta pihak berkuasa segera mengambil langkah terhadap mereka yang terlibat, termasuk penceramah agama Zamri Vinoth.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *