விஜய் சொன்ன நேரம் பார்த்து நடிகர் பார்த்திபன் போட்ட ட்வீட்!

top-news
FREE WEBSITE AD

It's WORTH! Worth & worth!Because women is another EARTH" என டைமிங்கில் ட்வீட் செய்துள்ளார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.தவெக தலைவர் விஜய், நேற்று தனது விவாகரத்து விவகாரம் தொடர்பான சலசலப்புகள் பற்றி பேசும்போது அது வொர்த்தே இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு மறைமுக பதில் கொடுக்கும் வகையில் ஆர்.பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

"பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம்.. சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே, சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ!" எனமகளிர் தினத்தன்று நடிகர் பார்த்திபன் எக்ஸ் தளத்தில் டைமிங்காக பதிவு செய்துள்ளார்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சங்கீதாவை தவெகவின் தொண்டர்கள் இணையங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய விஜய், முதல் முறையாக விவாகரத்து விவகாரம் தொடர்பாக மவுனம் கலைத்தார். விஜய் பேசும்போது, "சமீபத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் போராடி ஹர்ட் ஆக வேண்டாம். நீங்கள் ஹர்ட் ஆவது எனக்கு ஹர்ட் ஆகிறது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல.நீங்க மக்களுக்காக போராடுங்க. நானும் நீங்களும் சேர்ந்து மக்களின் பிரச்சனைகளை பார்ப்போம், அதில் வருத்தம் எல்லாம் கிடையாது" எனப் பேசியுள்ளார்.

இத்தனை ஆண்டுகாலமாக உடன் வாழ்ந்த மனைவியின் குற்றச்சாட்டு பற்றி அது வொர்த்தே இல்லை என விஜய் பேசியது விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான்,, ""It's WORTH! Worth & worth!Because women is another EARTH" என டைமிங்கில் ட்வீட் செய்துள்ளார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *