திருமணம் உறவு குறித்து நடிகர் சிம்பு மற்றும் திரிஷா!

top-news
FREE WEBSITE AD

விவாகரத்து செய்வதில் சிம்புவுக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் அவர் தனக்கு ஏற்றபடி மனதிற்கு பிடித்த பெண் வேண்டுமென்று காத்திருக்கிறார். இவர் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், நடிகை திரிஷா மற்றும் சிம்பு உள்ளிட்டோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் சிம்பு திருமணம் குறித்து மனம் திறந்தார். இது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது, திருமணம் பிரச்சனை கிடையாது. நாம் யாரை திருமணம் செய்கிறோம் என்பதுதான் பிரச்சனை.

நம்மிடம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்பது குறைந்து கொண்டே வருகிறது. நீ இல்லனா இன்னொருத்தன் நீ இல்லன்னா இன்னொருத்தி. இது என்ன மனப்பான்மை. நீ இல்லை என்றால் இன்னொருத்தன் வந்து கொண்டே தான் இருப்பான். இன்னொருத்தி வந்து கொண்டே தான் இருப்பாள். நமக்கான நேரம் வரும்போது கண்டிப்பாக நமக்கான ஒருத்தர் வருவார் அப்போது எல்லாம் நடக்கும் என்றார்.நடிகர் சிம்பு திருமணம் குறித்து பேசிய காணொளி தற்போது வலைதளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் இதேபோன்று 40 வயதை கடந்தும் நடிகை திரிஷாவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவரும் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து போன்றவைகளில் உடன்பாடு இல்லாததால் அதற்கான ஒருவர் வரும்வரை காத்திருப்பதாக கூறியதோடு திருமணம் நடந்தாலும் சரி திருமணம் நடக்கவில்லை என்றாலும் சரி என்று கூறியுள்ளார். மேலும் இதனால் நடிகர் சிம்பு மற்றும் திரிஷா இருவரும் திருமண விஷயத்தில் ஒரே மாதிரியான கொள்கைகளை கொண்டுள்ளனர் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *