பிஜேபிக்காக கோலமிட்டு வாக்கு சேகரிக்கும் நடிகை கஸ்தூரி!

top-news
FREE WEBSITE AD

தென்காசி, ஏப் 18: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின்பு மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் ஆனந்தன் அய்யாச்சாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பா.ஜனதா கலை, கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி பிரசாரத்திற்காக வந்திருந்தார். அப்போது அவர் வீடு வீடாகச் சென்று தாமரை கோலமிட்டும், நடனம் ஆடியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *