வெப்பமான காலநிலை காரணமாக திறந்த வெளி தீ விபத்துகள் அதிகரிப்பு
- Surendran Sumdraraj
- 24 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 24-
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, தோட்டங்கள், விவசாய நிலங்கள், காடுகள் மற்றும் புல்வெளிகளில் ஏற்படும் திறந்த வெளி தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது, தற்போதைய நிலவரப்படி வெப்பமான காலங்களில் பெறப்படும் அவசர அழைப்புகளில் சுமார் 40 முதல் 60 சதவீதம் வரை திறந்த வெளி தீ சம்பவங்களுடன் தொடர்புடையவை எனக் கூறினார்.
2024 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 32,810 திறந்த வெளி தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் விளக்கினார். இதில் வகைப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் 2,150 சம்பவங்கள், காடுகளில் 3,860 சம்பவங்கள் மற்றும் புல்வெளி, கொடிகள் மற்றும் லாலாங் பகுதிகளில் அதிகபட்சமாக 26,800 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த அதிகரிப்பு, நீண்ட கால வறட்சி மற்றும் மனித அலட்சியம் போன்ற காரணிகளுடன் தொடர்புடையதாகவும் அதிகாரிகள் கருதுகின்றனர். பொதுமக்கள் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் JBPM வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



