குழந்தையைக் கடத்த முயற்சித்த இளைஞர் கைது!

top-news
FREE WEBSITE AD

மே 27,

11 வயது சிறுமியைக் கடத்த முயற்சித்தாக 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 வயது இளைஞர் குற்றத்தை மறுத்து ஜாமின் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று கோலாலம்பூர் Majistret நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM5,000 ரிங்கிட் ஜாமின் வழங்கியது. Muhamad Rafiqzam Hafeq எனும் 23 வயது GRAB ஓட்டுநர் கடந்த 19 மே  நண்பகல் 2,30 மணிக்கு Bukit Damansara எரிவாயு நிலையத்தில் 11 வயது சிறுமியைக் கடத்த முயற்சித்ததாகவும் சிறுமியின் 49 வயது தந்தையால் அச்சிறுமி உடனடியாகக் காப்பாற்றப்பட்டாகவும் தெரிவிக்கப்பட்டது. 

முதற்கட்ட விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் காவல்துறை இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோலாலம்பூர் Majistret நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் RM5,000 ரிங்கிட் ஜாமின் வழங்கியதுடன் வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 20 க்கு ஒத்திவைப்பதாக Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *