RM 86 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்களுடன் ஐவர் கைது!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 15,

மலாக்காவில் மேற்கொள்ளப்பட்ட 3 வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசியப் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார். மலாக்கா Taman Puncak Bertam பகுதியில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி வீட்டிலிருந்து 5 கிலோ எடையிலான Erimin வகை போதைப்பொருள்களுடன் கைத்தொலைப்பேசிகளும் மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும், மலாக்கா Taman Kenanga பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் ekstasi, Erimin, ketamin வகை போதைப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார்.

மூன்றாவதாக மலாக்கா Taman Satu Krubong குடியிருப்புப் பகுதியில் உள்ள சொகுசு ஆடம்பர வீட்டில் MDMA, ERIMIN, KETAMIN மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார். இந்த சோதனை நடவடிக்கையின் போது 23 முதல் 55 வயதுள்ள ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அனைவரும் உள்ளூர்வாசிகள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு RM86.78 மில்லியன் ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தேசியப் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *