கேஜிஎப் நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதா சாகேப் பால்கே விருது
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
புதுடெல்லி, செப். 17-
இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, கன்னட திரையுலகின் மூத்த நடிகர் ஆனந்த் நாகிற்கு வழங்கப்பட உள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பை பாராட்டும் வகையில் மத்திய அரசு இந்த விருதை அறிவித்துள்ளது.
ஆனந்த் நாக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் செயல்பட்டு வருகிறார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அண்மைய தலைமுறை ரசிகர்களிடம் அவர், ‘கேஜிஎப் 1’ திரைப்படத்தில் கதையை விவரிக்கும் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் பரவலாக அறிமுகமானார்.
1973-ஆம் ஆண்டு வெளியான ‘சங்கல்பா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஆனந்த் நாக், தொடர்ந்து ‘ஹம்சகீதே’, ‘சந்தனத கொம்பே’, ‘கணேஷனா மதுவே’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



