அரசியலிலிருந்து விலகிய டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர்? டி.ஏ.பி தலைமை மிரட்டியதா?
- THINAGAREN SANGGAREN
- 01 Jun, 2026
ஜூன் 1,
டி.ஏ.பியின் SKUDAI சட்டமன்ற உறுப்பினர் MARINA IBRAHIM அரசியலிலிருந்து விலகுவதாகவும் இனி சட்டமன்றத் தேர்தல் உட்பட கட்சி அரசியலிலும்
ஈடுபடமாட்டேன் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். மரீனாவின் இந்த முடிவை ஏற்பதாகத் துணை
அமைச்சரும் ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவருமான Teo Nie Ching தெரிவித்தார். ஆனால் தற்போது
MARINA IBRAHIM ஜொகூர் மாநில டி.ஏ.பிக்கு எழுதியதாக நம்பப்படும் ஒரு கடிதம் சமூகவலைத்தலங்களில்
பரவி வருகிறது.
கடந்த மே 17 ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவர் Teo Nie Ching நடப்பு
SKUDAI சட்டமன்றத் தொகுதியிலிருந்து MARINA
IBRAHIM-ஐ வேறு ஒரு சட்டமன்றத்தில் போட்டியிடும்படி வலியுறுத்தியதாகவும்
தேர்தலில் தோல்வி அடைந்தாலோ அல்லது புதிய சட்டமன்றத்தை ஏற்கவில்லை என்றாலோ MARINA
IBRAHIMக்கு அரசு துணை நிறுவனமான GLC-யில் தலைமை பொறுப்பு
வழங்குவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு டி.ஏ.பியில் இணைந்த MARINA IBRAHIM கடந்த 2022 ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் SKUDAI சட்டமன்றத்தில் 26,359 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ஏ.பி இளம் மலாய் தலைவர்களில் முக்கியமானவராக MARINA IBRAHIM திகழ்ந்து வருவதால் டி.ஏ.பியில் உள்ள மலாய் ஆதரவாளர்கள் ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவர் Teo Nie Chingக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



