டி.ஏ.பியைக் கம்யூனிஸ்ட் என அடையாளப்படுத்திய பாஸ் கட்சிக்கு RM825,000 அபராதம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 24,

டி.ஏ.பி தலைவர்களைக் கம்யூனிசவாதிகள் என குறிப்பிட்ட பாஸ் கட்சியின் KEPALA BATAS நாடாளுமன்ற உறுப்பினரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் RM825,000 அபராதத்தைச் செலுத்தும்படி இன்று மேல்முறையீட்டு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. டி.ஏ.பியின் மூத்தத் தலைவரான Tan Sri Lim Kit Siang, அவருடைய மகனும் டி.ஏ.பி முன்னாள் தலைவருமான Lim Guan Eng, Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் Teresa Kok Suh Sim ஆகிய மூவரும் கம்யூனிசவாதிகள் என்றும் கம்யூனிசத்தை மலேசியாவுக்குள் பரப்ப முயற்சிக்கும் கூட்டம் என்றும் பாஸ் கட்சியின் KEPALA BATAS நாடாளுமன்ற உறுப்பினரான Siti Mastura Muhammad அவதூறு பரப்பிய நிலையில் அவருக்குப் பினாங்கு உயர்நீதிமன்றம் RM825,000 அபராதம் விதித்தது.

அபராதத் தொகையைக் குறைக்கும்படி KEPALA BATAS நாடாளுமன்ற உறுப்பினரான Siti Mastura Muhammad மேல்முறையீடு செய்த நிலையில் அவருடைய சொத்து மதிப்புகளைக் கணக்கிட்டு அபராதத் தொகையைக் குறைக்க அவசியம் இல்லை என்றும் பினாங்கு உயர்நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்தும்படியும் மேல்முறையீட்டு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முடிவில் Tan Sri Lim Kit Siang க்கு RM 3  லட்சம் ரிங்கிட்டும், Lim Guan Engக்கு RM 250,000 ரிங்கிட்டும், Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் Teresa Kok Suh Simக்கு RM 2  லட்சம் ரிங்கிட்டுடன் வழக்கு செலவு RM25,000 ரிங்கிட்டையும் செலுத்த வேண்டும் என பாஸ் கட்சியின் KEPALA BATAS நாடாளுமன்ற உறுப்பினரான Siti Mastura Muhammadக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *