இப்போதே ஆட்சியிலிருந்து டி.ஏ.பி விலகட்டும்! அம்னோ பதிலடி!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 30

அமைச்சர் பதவியிலிருந்து டி.ஏ.பி விலகுவதாக இருந்தால் நஜீப் விடுதலையாகும் வரையில் காத்திருக்காமல் இப்போதே பதவி விலகட்டும் என அம்னோவின் துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hasan டி.ஏ.பி அமைச்சர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ஜொகூர் தேர்தலுக்கும் நஜீப் விடுதலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. ஆனால், டி.ஏ.பி அமைச்சர் Nga Kor Ming தேவையில்லாமல் அம்னோவைச் சீண்டி பார்க்கிறார் என வெளியுறவு அமைச்சருமான Datuk Seri Mohamad Hasan தெரிவித்தார். 

ஒற்றுமை கூட்டணியின் ஒப்பந்தத்தை டி.ஏ.பி மீறாமல் இருக்கும் வரையில் பக்காத்தான் பாரிசான் இடையிலான ஆட்சியில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என Datuk Seri Mohamad Hasan டி.ஏ.பிக்கு நினைவூட்டினார். நஜீப்பிற்கு எதிரான மனநிலையில் டி.ஏ.பி இருக்குமே என்றால் பாரிசான் பக்காத்தான் இணைந்து அமைத்திருக்கும் ஆட்சியிலிருந்து டி.ஏ.பி விலகி போகட்டும். நஜீப் விடுதலையாவதற்கான எல்லா வழிகளையும் பாரிசான் முன்னெடுக்கும். ஆகையால் நஜீப் விடுதலையாகும் வரையில் டி.ஏ.பி காத்திருக்காமல் உடனடியாக, இப்போதே டி.ஏ.பி அமைச்சர்கள் பதவி விலகட்டும் என Datuk Seri Mohamad Hasan காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *