டி.ஏ.பி தொகுதிகளை விட்டுக்கொடுக்காது! ANTHONY LOKE உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 10 Jun, 2026
ஜூன் 10,
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பியின் கட்டுப்பாட்டில் உள்ள 11 சட்டமன்றங்களிலும் டி.ஏ.பியே போட்டியிடும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக டி.ஏ.பியின் பொதுச் செயலாளர் Anthony Loke உறுதிப்படுத்தினார். கடந்த 2013 முதல் நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி போட்டியிட்ட அனைத்து சட்டமன்றங்களிலும் வெற்றி பெற்று வருகிறது. டி.ஏ.பி பலமாக இருக்கும் சட்டமன்றங்களில் மட்டுமே டி.ஏ.பி போட்டியிட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது என Anthony Loke தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலிலும் டி.ஏ.பி கட்சி போட்டியிடும் தொகுதிகளை டி.ஏ.பி அடையாளம் கண்டிருப்பதாகவும் Anthony Loke தெரிவித்தார். கடந்த 2023 நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி 11 சட்டமன்றங்களில் போட்டியிட்டு அனைத்து சட்டமன்றங்களிலும் வெற்றி பெற்றதை Anthony Loke சுட்டிக்காட்டினார். பி.கே.ஆர் 6 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 4 சட்டமன்றங்களிலும் அமானா 2 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 1 சட்டமன்றத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



