ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்: தற்போதைய அனைத்துத் தொகுதிகளையும் தக்கவைக்க டிஏபி முடிவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5 –

வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் (PRN), தாங்கள் தற்போது வைத்திருக்கும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ள டிஏபி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் Anthony Loke தெரிவித்துள்ளார்.

மேலும், ஜொகூர் மாநிலத்தில் கூடுதலாக சில தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புகளையும் டிஏபி ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார். இருப்பினும், கூடுதலாக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது கூட்டணி கட்சிகளுடனான இறுதி பேச்சுவார்த்தைக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

“நேற்று இரவு டிஏபி மத்திய செயற்குழு (CEC) மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலத் தேர்தல் தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன,” என்று அந்தோணி லோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளதால், ஜூன் 1 முதல் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவிருந்த டிஏபியின் 2026 தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டு, ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *