இது டி.ஏ.பி ஆட்சி அல்ல! ZAHID எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 02 Jan, 2025
ஜனவரி 2,
Lim Guan Eng தெரிவிக்கும் கருத்து ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாகப் பார்க்க வேண்டியதில்லை என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi இன்று தெரிவித்தார். அவருக்குத் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தால் அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சியை டி.ஏ.பி ஆட்சியாக நினைத்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
டி.ஏ.பியில் Guan Eng சகாப்தம் முடிந்து விட்டது. டி.ஏ.பியின் மேல்மட்ட தலைவர்களுடனும் கலந்துரையாடி Lim Guan Eng இனி கருத்துகளை வெளியிட்டால் அது டி.ஏ.பிக்கு நல்லது என அவர் வலியுறுத்தினார். நஜீப்பிற்கு ஆதரவாக யார் வர வேண்டும் வர கூடாது என்பது குறித்து Lim Guan Eng கவலைப்பட வேண்டாம், டி.ஏ.பி கட்சியை மட்டும் அவர் பார்த்தால் போதும், தேவையற்ற கருத்துகளைப் பேசி ஒரே குடையின் கீழ் இருப்பதை மறக்க வேண்டாம் என அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Presiden UMNO, Ahmad Zahid Hamidi menasihatkan Lim Guan Eng agar tidak mengeluarkan kenyataan yang boleh menyinggung rakan dalam Kerajaan Perpaduan dan memberi kepercayaan kepada kepimpinan baharu DAP.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *