டி.ஏ.பியின் நாடகம்! அம்னோ யாரையும் பதவி விலக சொல்லவில்லை! – அம்னோ விளக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 21 Sep, 2026
செப்டம்பர் 21,
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் பதவி விலகியதற்கும் அம்னோவுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என அம்னோ உதவித் தலைவரும் தற்காப்பு அமைச்சருமான Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார். அம்னோ எந்தவொரு அமைச்சரையும் பதவி விலகும்படி வலியுறுத்தவில்லை. இது டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்திருக்கும் முடிவு என Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார். பதவியில் இருக்கும் எந்தவோர் அமைச்சரும் ராஜினாமா செய்வதாக அறிவிக்கலாம். ஆனால் அவர்களுடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் பிரதமரின் முடிவு என Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
இது போன்ற பல நாடகங்களை அம்னோ பார்த்து விட்டது. டி.ஏ.பியைப் பொறுத்தவரையில் ஒரு மிரட்டல் விடுப்பதாக இந்த ராஜினாமாவைச் செய்துள்ளனர். ஆனால், அவர்களுடன் இருக்கும் பிரதமரை மிரட்ட ராஜினாமா செய்யும் அளவிற்குப் போவது ஏன் என Datuk Seri Mohamed Khaled Nordin கேள்வி எழுப்பினார். அமைச்சரவையில் இருக்கும் எந்தவோர் அம்னோ உறுப்பினர்களும் மற்ற அமைச்சர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தவில்லை. இது அவர்களுடைய முடிவு என அம்னோ உதவித் தலைவரான Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



