MCA விட DAP உடன் வேலை செய்யலாம்! – பகாங் மெந்திரி பெசார்!
- Thinagaren Sanggaren
- 09 Jan, 2026
ஜனவரி 9,
பகாங்கில் பாரிசானும் பக்காத்தானும் இணைந்த அமைத்திருக்கும் ஆட்சி நிலையாகவே இருப்பதாகப் பகாங் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Wan Rosdy Wan Ismail தெரிவித்தார். உண்மையில் MCA-வை விடவும் டி.ஏ.பியுடன் இணைந்து மக்கள் பணிகளை முன்னெடுப்பதில், குறிப்பாக மலாய்க்காரர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது இலகுவாக இருப்பதாக அம்னோ உதவித் தலைவருமான Datuk Seri Wan Rosdy Wan Ismail தெரிவித்தார். மத்திய அரசில் டி.ஏ.பியுடன் அம்னோ என்ன மாதிரியான ஒத்துழைப்புடன் செயல்படுகிறது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் பகாங்கில் ம.சீ.சவை விடவும் டி.ஏ.பி சிறப்பான ஒத்துழைப்பை வழங்குவதாக Datuk Seri Wan Rosdy Wan Ismail வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பகாங்கில் டி.ஏ.பியுடன் அம்னோ கூட்டணி அமைத்து 3 ஆண்டுகள் ஆட்சியும் நடத்தி விட்டோம். மலாய்க்காரர்களுக்கான நலத்திட்டங்களைப் பகாங் மாநில அரசு முன்னெடுக்கும் போது டி.ஏ.பியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள். அவர்களும் மலாய்க்காரர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த முன் வருகிறார்கள். குறிப்பாக மலாய்க்காரர்களின் நல்வாழ்வுத் திட்டங்களை வடிவமைக்கவும் முடிவெடுக்கவும் மலாய்க்காரர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் பகாங் டி.ஏ.பியினர் இருக்கிறார்கள் என அம்னோ உதவித் தலைவரும் பகாங் மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Wan Rosdy Wan Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



