கூட்டணிக்கு ஆபத்தை விளைவிக்கும்படி பேசாதீர்! டி.ஏ.பிக்கு அம்னோ எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

மே 7,

அம்னோவையும் பாரிசானையும் இழிவுப்படுத்தும் வகையில் டி.ஏ.பி பொதுவில் கருத்துகளைப் பகிர்வது ஆட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அம்னோ உதவித் தலைவரும் பகாங்  மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Wan Rosdy Wan Ismail எச்சரித்தார். லிம் குவான் எங் இப்போது பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. டி.ஏ.பியின் தலைமை கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என Datuk Seri Wan Rosdy Wan Ismail வலியுறுத்தினார். 

சமீபத்திய அரசியல் நெருக்கடிகள் குறித்து அம்னோ தலைமையும் டி.ஏ.பி தலைமையும் சுமூகமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் இரு கட்சிகளின் தலைமையும் முறையான புரிந்துணர்வுடன் செயல்படுவதாக Datuk Seri Wan Rosdy Wan Ismail தெரிவித்தார். லிம் குவான் எங் அம்னோவை எப்படி பார்க்கிறார் என்பதில் அம்னோவுக்குக் கவலையில்லை. ஏனெனில் அம்னோ தலைமை லிம் குவான் எங்கின் கருத்துகளை ஏற்பதில்லை. அம்னோவின் தலைமையும் டி.ஏ.பி தலைமையும் நிலையான நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாக அம்னோ உதவித் தலைவரான Datuk Seri Wan Rosdy Wan Ismail நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *