அன்வாரைச் சந்தித்து 10 கோரிக்கைகளை முன்வைத்த லிம் குவான் எங்!
- Thinagaren Sanggaren
- 17 Jan, 2026
ஜனவரி 17,
டி.ஏ.பியின் முன்னாள் தலைவரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் இன்று காலை பிரதமர் அன்வாரைச் சந்தித்து முக்கிய விவாதங்களை நிகழ்த்தியதாகத் தெரிவித்தார். பக்காத்தான் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் இன்னும் செயல்படுத்தாமல் இருப்பதால் சபா சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம் என வலியுறுத்திய முன்னாள் நிதியமைச்சரான லிம் குவான் எங் தற்போது அன்வாரை நேரில் சந்தித்து தனது அதிருப்தி கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
முன்னதாக லிம் குவான் எங் பிரதமர் அன்வாருக்கு 10 நிபந்தனை கோரிக்கைகளைக் கடிதமாக வெளியிட்டிருந்தார். அந்த கடிதம் சமூக வலைத்தலங்களிலும் அரசியல் தலைவர்களின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பக்காத்தான் கூட்டணியிலும் ஆட்சியிலும் இருக்கும் கட்சிகளிலின் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சியான டி.ஏ.பி வெளிப்படையாகப் பிரதமருக்கு எதிரானக் கருத்துகளை வெளியிட்டிருந்து ஆட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்களும் தெரிவித்தனர்.
தற்போது லிம் குவான் எங் முன்வைத்த 10 சீர்த்திருத்த நடவடிக்கைகளையும் விரைந்து மடானி அரசு செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பிரதமர் அன்வாரை நேரில் சந்தித்து 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வழங்கியதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



