டி.ஏ.பிக்கு எந்த இலவசமும் அரசு சலுகைகளும் வேண்டாம்! அந்தோணி லோக் அதிரடி!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 19,

இன்று நடைபெற்ற டி.ஏ.பி கட்சியின் 60 ஆண்டு நிறைவு விழாவில் டி.ஏ.பியின் தலைவர்கள் பலரும் பங்கேற்றிருந்த நிலையில் டி.ஏ.பி கட்சியினர்களில் தலைமையில் இருப்பவர்கள் இலவசங்களைப் பெற கூடாது என உறுதிமொழி எடுக்க வேண்டும் என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தினார். இன்று நடைபெற்ற டி.ஏ.பி கட்சியின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் கொண்டாட்டத்திலேயே உறுப்பினர்களிடமிருந்தும் டி.ஏ.பியின் தேசிய உயர்மட்டத் தலைவர்களிடமிருந்தும் வசூல் நடத்தப்பட்டு பெறும் தொகையைக் கொண்டு கட்சியின் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அந்தோணி லோக் உறுதியளித்தார். 

குறிப்பாக அரசுப் பதவிகளில் இருக்கும் டி.ஏ.பி தலைவர்கள் அரசாங்கம் பாமர மக்களுக்கு வழங்கும் உதவி நிதித் நிதித் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அப்படியான உதவிகளைத் தேவையான வறுமை நிலையில் வாழும் மக்களுக்கு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். ஜூலை 12 நடத்தப்படவிருக்கும் டி.ஏ.பியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்காலத்திற்குத் தேவையான முக்கிய முடிவுகளை எடுக்கவிருப்பதால் சீர்த்திருத்தங்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என அந்தோணி லோக் தெரிவித்தார். 

இந்த சிறப்பு மாநாட்டில் கட்சியின் நிதி பயன்படுத்தப்படும் என்றும் டி.ஏ.பியில் உறுப்பினர்கள் பலரும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் நம்மோடு போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கான நல்வாழ்வை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் அவர்களுடைய பொருளாதாரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும் என அந்தோணி லோக் டி.ஏ.பியின் தலைமைக்கு வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *