DAP & AMANAH கட்சியினர் வெட்கப்பட வேண்டும்! - Dato' Ambiga Sreenevasan
- Thinagaren Sanggaren
- 14 Aug, 2024
பக்காத்தான் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்து கொள்வதற்காக பாரிசானுடன் கைக்கோர்த்தும் டி.ஏ.பி அமானா கட்சியினர்களும் தங்கள் பேச்சுரிமையையும் விட்டுக் கொடுத்துவிட்டதாகப் பிரபல அரசியல் விமர்சகரும் பெர்சே தோற்றுநருமான Dato' Ambiga Sreenevasan தெரிவித்தார்.
சட்டத்திருத்தங்களின்
வாயிலாக மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும்படியானச் செயல்களை அரசாங்கம் முன்னெடுக்கும்
போது அமானா டி.ஏ.பி கட்சியினர்கள் அமைதியாகவே இருப்பது அவர்களின் கையாலாகாதத்தனத்தைக்
காட்டுவதாகவும், ZAHID HAMIDI மீதான ஊழல்
வழக்குகளில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் இருந்ததற்கு டி.ஏ.பி அமானா கட்சிகள் வெட்கப்பட
வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பி.கே.ஆர் கட்சியினர்கள் பேச முடியாதபடி உள்ளனர்.
அதற்கு காரணம் அன்வார் எனும் பலமானத் தலைவர் பிரதமராக இருக்கிறார். ஆனால் உறுப்புக்
கட்சிகளான டி.ஏ.பி அமானா எனும் கட்சிகள் பதவிக்காவும் ஆட்சிக்காகவும் அமைதியாக இருப்பது
வெட்கப்பட வேண்டியது என Dato' Ambiga Sreenevasan கடுமையாகச்
சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



