சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 19 வாகனங்களைப் பறிமுதல் செய்த DBKL!
- Thinagaren Sanggaren
- 20 Jan, 2026
ஜனவரி 20,
தலைநகரில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 19 வாகனங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. நேற்று மாலை தலைநகர் Pusat Bandar Utara முதன்மை சாலையில் அமலாக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் 3 மணிநேரத்திற்கும் மேலாகச் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 லாரிகள் 3 வேன்கள் 8 மோட்டார் சைக்கிள்கள் உட்பட மொத்தம் 19 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
தலைநகரின் சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்ப விரிவாக
இருந்தாலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாகச் சாலையோரங்களில்
வாகனங்களை நிறுத்துவது என கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது. மேலும் உரிமை
பெற்ற சாலையோரக் கடைகளைப் பயனர்கள் பயன்படுத்த முறையான வாகன நிறுத்துமிடமும் வழங்கப்பட்டிருப்பதைக்
கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டிருக்கும்
வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகவும் வழங்கப்பட்ட சம்மன்களைச்
செலுத்தி வாகனங்களை மீட்டுக்கொள்ளும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அறிவுருத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



