பொது இடத்தில் நிறுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! – DBKL

top-news

ஜனவரி 20,

தலைநகரில் பொதுமக்களின் நடைபாதைகளை முற்றுகையிடும்படியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 21 மோட்டார் சைக்கிள்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் {DBKL} பறிமுதல் செய்தது. சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் உட்பட, பொது வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கும் 41 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் {DBKL} தெரிவித்தது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் {DBKL} அலுவலகத்தில் அபராதத்தொகையைச் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ளும்படியும் அதுவரையில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் செந்தூலில் உள்ள Depoh Simpanan Kenderaan Ditunda DBKL கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

DBKL merampas 21 motosikal yang menghalang laluan awam dan mengganggu trafik di ibu kota. Sebanyak 41 saman turut dikeluarkan. Pemilik perlu membayar denda untuk menuntut motosikal yang kini disimpan di depoh DBKL.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *