பறிமுதல் செய்த பொருளை லஞ்சம் பெற்று மீண்டும் கொடுத்ததா DBKL?
- THINAGAREN SANGGAREN
- 10 Jun, 2026
ஜூன் 10,
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் அதிகாரிகள் மீண்டும் வணிகரிடம் வழங்கும்படியானக் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியது. காணொலியில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் வாகனத்திலிருந்து அதன் அதிகாரிகள் பொருள்களை, வணிகரிடம் வழங்கும்படியானக் காட்சிகள் இடம்பெற்றது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் கடந்த ஜூன் 7 ஆம் நாள் BUKIT BINTANG சாலையோரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உணவுப் பொருள்களை விற்பனை செய்தவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அவை என்றும் பறிமுதல் செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் அந்த வணிகரிடமே ஒப்படைத்ததாகவும் பொருள்களை மட்டுமே பறிமுதல் செய்ததாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் உணவுகளும் அடங்கியிருப்பதால் சம்மந்தப்பட்ட வணிகரிடம் அந்த உணவுகளைத் திருப்பிக் கொடுக்கும் போது அந்த காணொலி பதிவு செய்யப்பட்டதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் விளக்கமளித்துள்ளது. சம்மந்தப்பட்ட காணொலியைப் பரப்பியவர்கள் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் அதிகாரிகள் லஞ்சம் பெற்று அந்த பொருள்களை மீண்டும் வழங்கியதாகத் தவறானத் தகவல்களைப் பரப்பியதற்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



