தலைநகரில் சாலையோரக் கண்காட்சிக் கூடாரங்கள் பறிமுதல்! - DBKL

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 23,

தலைநகர் செப்பூத்தே சாலையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வணிகக் கூடாரங்களையும் கண்காட்சிக்கானக் கூடாரங்களையும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL அப்புறப்படுத்தியது. போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வணிகக் கூடாரங்களை அகற்றும்படி கடந்த திங்கள் நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில் கூடாரங்களை அகற்றாத வணிகர்களின் பொருள்கள் உட்பட புதிதாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கானக் கூடாரங்களையும் இன்று காலை கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

செப்பூத்தேவில் உள்ள JALAN KUCHAI MAJU சாலையில் அதிகமான வாகன நெரிசல் ஏற்படுவதற்கு மதன்மை காரணமாக இந்த சாலையோர வணிகளக் கடைகள் என தெரிய வந்துள்ளதாகவும் வணிகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பிரித்தியேக வணிகத்தலத்தில் கூடாரங்களை அமைக்கவும் DBKL இலகுவாக்கியிருப்பதால் வணிகர்கள் அவர்களுக்கான வணிகத்தலங்களைப் பயன்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்த முன் அனுமதியும் பெற வேண்டும் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை அபராதம் செலுத்தி மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி வணிக உரிமையாளர்களுக்குக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL வலியுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *