தலைநகரில் 3 வணிக வளாகங்களை மூடிய DBKL!
- Thinagaren Sanggaren
- 15 Feb, 2026
பிப்ரவரி 15,
தலைநகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 3 வணிக வளாகங்களை உடனடியாக மூடும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியுள்ளது. செகாம்பூட்டில் உள்ள Eko Mall Cheras, Wisma Fiamma Bandar Manjalara, Solaris Mont Kiara ஆகிய வணிக வளாகங்களில் இயங்கி வந்த கேளிக்கை மையம் வணிக வளாகத்திற்கான உரிமத்தைக் கொண்டிருந்து கேளிக்கை மையத்தை நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது. வணிக வளாகத்தில் இருந்த அனைத்து பொருள்களையும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்ததுடன் வணிக உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட 3 கேளிக்கைகளில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்ட வெளிநாட்டினர்களைத் தடுத்து வைத்திருப்பதாகவும் கேளிக்கை மையங்கள் போலியான ஆவணங்களைக் கொண்டு உரிமம் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 3 வணிக வளாகங்களுக்கும் 7 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் 3 வணிக வளாகங்களின் உரிமையாளர்களை நேரில் ஆஜராகும்படி நோட்டிஸ் வழங்கியிருப்பதுடன் உரிமத்தை ரத்து செய்திருப்பதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



