தலைநகரில் மின்சைக்கிள்கள் பறிமுதல்! – DBKL

top-news

பிப்ரவரி 11,

நேற்று மாலை தலைநகரின் முக்கிய சாலைகளில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாகப் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த மின் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தது. தலைநகரின் Jalan Ampang, Jalan P. Ramlee, Jalan Pinang, Jalan Bukit Bintang ஆகிய முக்கிய பகுதிகளில் இச்சோதனையை மேற்கொண்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

நடைபாதைகளை ஆக்கிரமித்து வணிகக் கூடாராங்களை அமைத்திருந்த வணிகக் கடைகளின் பொருள்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மின்சைக்கிள்கள் எந்தவொரு உரிமம் பெறாமல் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

Dewan Bandaraya Kuala Lumpur (DBKL) telah menyita basikal elektrik yang digunakan secara tidak sah di beberapa lokasi utama ibu kota, termasuk Jalan Ampang, Jalan P. Ramlee, Jalan Pinang dan Jalan Bukit Bintang. Pihak berkuasa turut merampas barangan daripada premis perniagaan yang halang laluan pejalan kaki.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *