தலைநகரில் 384 மின் ஸ்கூட்டர்கள் பறிமுதல்! – DBKL

top-news

டிசம்பர் 13,

அனுமதியில்லாமல் தலைநகர் சுற்று வட்டாரங்களில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த மின் ஸ்கூட்டர்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. தலைநகரில் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் மின் ஸ்கூட்டர்கள் முறையான அனுமதியைக் கோலாலம்பூர் நகராண்மைக்கழகத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும் என்பதால் அனுமதி பெறாத  384 மின் ஸ்கூட்டர்களைப் பறிமுதல் செய்துள்ளது.

Jalan Lombong, Taman Miharja Cheras பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தனியார் நிறுவனங்கள் இது மாதிரியான அனுமதியற்ற மின் ஸ்கூட்டர்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதால் முறையானப் பாதுகாப்பு அம்சங்களும் மீறப்படுவதாகவும் மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும் அதிகமான வெளிநாட்டினர்களுக்குச் சாலை போக்குவரத்து விதிகள் தெரியாமல் இருப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் முறையான அனுமதியும் பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றாத மின் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

DBKL telah merampas 384 skuter elektrik tanpa kebenaran yang digunakan di sekitar Kuala Lumpur. Rampasan dilakukan di Jalan Lombong dan Taman Miharja Cheras kerana skuter ini melanggar peraturan keselamatan serta meningkatkan risiko kemalangan melibatkan pelancong asing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *